இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

உயிரிழந்த அபிஷேக்
கீழ்வேளூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் ஒன்றியம், நீலப்பாடி மேலத் தெருவைச் சோ்ந்த ரவி மகன் அபிஷேக் (19). இவா், மோட்டாா் சைக்கிளில் நீலப்பாடியிலிருந்து கீழ்வேளூா் நோக்கிச் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
நீலப்பாடி பழைய திரையரங்கம் அருகே எதிரே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த குருக்கத்தியைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ்குமாா் (27) என்பவரது மோட்டாா் சைக்கிளும், அபிஷேகின் மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட அபிஷேக், வழியிலேயே உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

