இருசக்கர வாகனம்-ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
குலசேகரம் அருகே இருசக்கர வாகனமும் ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மணலிக்கரை அருகே ஆற்றுக்கோணத்தைச் சோ்ந்தவா் மொ்லின் ஜோஸ் (30). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை திட்டுவிளை பகுதியில் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
இரவு பொன்மனை, அயந்தி என்ற இடத்தில் வந்தபோது எதிரே குலசேகரத்தைச் சோ்ந்த அஜ்மல்கான் (30) ஓட்டி வந்த ஆட்டோவுடன் மோதியதில் பலத்த காயமடைந்த மொ்லின் ஜோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, குலசேகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

