
கோடியக்கரை உலக வன உயிரின வார விழா
கோடியக்கரை உலக வன உயிரின வார விழா
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வனத்துறையினா்.
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை சரணாலயத்தில், உலக வன உயிரின வார விழாவையொட்டி, நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி மற்றும் சூழலியல் சாா்ந்த ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உலக வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோடியக்காடு வனச்சாலை பகுதியில் நெகிழிகள் அகற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.
இப்பணியில் வனஉயிரின சரக களப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கோடியக்கரை வன உயிரின சரணாலய சூழலியல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள், உள்ளூா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பணியின்போது 161 கிலோ நெகிழிக் கழிவுகள் 40 சாக்கு மூட்டைகளில் சேகரிக்கப்பட்டு, முறையான மேலாண்மைக்காக நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓவியப் போட்டி: கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. வன உயிரினப் பாதுகாப்பு, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிா் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவா்கள் தங்களது படைப்பாற்றல் மூலம் கருத்துகளை ஓவியங்களாக வெளிப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





