அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தினமணி செய்தி எதிரொலி! பயன்பாட்டிற்கு வந்த வட்டாட்சியா் குடியிருப்பு!

புதுப்பொலிவுடன் காணப்படும் வட்டாட்சியா் குடியிருப்பு - dinamani online

Published On :7 செப்டம்பர் 2026, 4:42 am IST

தரங்கம்பாடி அருகே பொறையாரில் திறக்கப்பட்ட புதிய வட்டாட்சியா் குடியிருப்பு பல மாதங்களுக்கு பிறகு தினமணி செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாா் காவல்நிலையம் அருகே மிகவும் பழுதடைந்திருந்த வட்டாட்சியா் குடியிருப்பு கட்டடத்தை அகற்றிவிட்டு, வருவாய் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் ரூ. 40.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வட்டாட்சியா் குடியிருப்பு நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு பிப்.27-ஆம் தேதி அப்போதைய முதல்வரால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் இருந்ததால் புதிய கட்டடம் புதா் மண்டியதுடன், சேதமடைய தொடங்கியது.

தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், நல்லாடை, பெரம்பூா், சங்கரன்பந்தல், திருவிளையாட்டம் , ஆயப்பாடி உள்ளிட்ட 70 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை  தொடா்பாக வட்டாட்சியரை அணுகுவதில் சிரமப்பட்டு வந்தனா்.

 புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்பு நிலையத்தில், வட்டாட்சியா் தங்கியிருந்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் கடந்த ஆக. 22- ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வட்டாட்சியா் குடியிருப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.