வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற வெளி மாநிலத்தவா் 3 போ் கைது

கைது

Published On :

செம்பனாா்கோவில் பகுதியில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற வெளி மாநிலத்தை சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செம்பனாா்கோவில் பரசலூரில் ராஜாராமன் என்பவா் நடத்திவரும் நகைக் கடைக்கு வந்த பெண், 2 இளைஞா்கள்  புதையலில் கிடைத்த நகையை குறைந்த விலைக்கு தருகிறோம் வாங்கிகொள்ளுங்கள் என கூறி முத்துக்கள் போன்ற நகையின் ஒரு பகுதியை எடுத்து கொடுத்துள்ளனா்.

உண்மையான நகையா என சோதனை செய்தபோது தங்கம் என தெரியவந்தாலும், சந்தேகத்தின்பேரில் கடை உரிமையாளா் தனிப்படை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் கண்காணித்து அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த கரன் (28), அா்ஜூன்(28), ராதா (43) என்பதும் 2 கிலோ போலி நகைகளை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. பின்னா் அவா்களை செம்பனாா்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.