மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

Updated On :13 மே 2013, 1:29 am IST

காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஆண்டின் கோடை விடுமுறை காலத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, ஆங்கில பேச்சுத் திறன் மற்றும் கணினி அறிவை மேம்படுத்தும் பயிற்சி 15 நாள் நடத்தப்படுகிறது. நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்தில் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு 7 மையங்களில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதன் நிறைவு நிகழ்ச்சி அந்தந்த மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் நிறைவு நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வித் திட்ட துணை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஞானப்பிரகாசம், மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற துணை முதல்வர் ஜி. நடராஜன், ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் வி. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.