திருநள்ளாறு கோவிலில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைக்க சனிக்கிழமை திரளான பக்தர்கள் திரண்டதால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு, குளத்தின் அருகில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு, இக்கோவில் அருகே தேங்காய் உடைக்கும் மண்டபத்தில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைப்பர்.
சனிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து ஏராளமானோர் வந்ததால், இந்தப் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர். தற்போது விடுமுறை காலம் என்பதால், கூடுதலான பக்தர்கள் வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் கூடுதல் போலீஸார், கோவில் பணியாளர்கள் ஆகியோரை நியமித்து பக்தர்களை முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.100 கோடி ஆன்லைன் கல்வி நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!
எரிபொருள் விலை உயர்வு: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
