மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னார்குடி அருகேயுள்ள மகாதேவப்பட்டணம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் (45). இவரது மனைவி ஜர்வா (39). ஜர்வாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, ஜர்வாவை கணவர் ஜோஸ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த ஜர்வா, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய ஜோஸ்சை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


