அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கட்சி கொடியேற்று விழா

நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:46 pm

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
ரிஷியூர் தெற்குத் தெருவில் டி. மதியழகன், பி. வீரையன் ஆகியோர் தலைமையில், ரிஷியூர் காலனி தெருவில் கே.ரவி. கே. பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலையில் 40 குடும்பத்தினர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் சால்வை அணி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், பி. கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே. கைலாசம், ஒன்றியச் செயலர் சோம. ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.டி. ஜோசப், எஸ்.நாகூரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.