தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:24 pm

DIN

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியினர் சிலர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், நகரச் செயலர் பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலர் இடும்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீடாமங்கலத்தில்...
தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் கட்சியினரை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை கோரி, நீடாமங்கலத்தில் அக்கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலர் சோம. ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கே. கைலாசம், நகரச் செயலர் சி.டி. ஜோசப், மாதர் சங்க ஒன்றியச் செயலர் ஆர். சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.