கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, நாகையில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாணவரணி சார்பிலும்,

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:28 pm

DIN

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, நாகையில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாணவரணி சார்பிலும், திருவாரூரில் அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பு சார்பிலும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், இதுகுறித்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில்... 
நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மண்டல மாணவரணி செயலாளர் நாத்திகபொன்முடி தலைமை வகித்தார். 
திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள் நெப்போலியன், குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் கி. தளபதிராஜ், ஜெ. புபேஸ்குப்தா, மதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.எஸ். மோகன், மதிமுக நிர்வாகி என்.எஸ். அழகிரி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் மு.க. ஜீவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன், தமுமுக மாவட்டச் செயலாளர் ஜபருல்லா, முஸ்லிம் லீக் மாணவரணி நகர அமைப்பாளர் எம். இஸ்மாயில் ஆகியோர் பேசினர். 
திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  எஸ்.டி.பி.ஐ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
திராவிடர் கழக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சு. ராஜ்மோகன் வரவேற்றார். திராவிடர் கழக நாகை நகரச் செயலாளர் தெ. செந்தில்குமார் நன்றி கூறினார்.
திருவாரூரில்...
அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பு சார்பில், திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் மாணவரணி அமைப்பாளர் ச. திலீபன் தலைமை வகித்தார்.
 கோரிக்கையை விளக்கி தலைமைக் கழகப் பேச்சாளர் வி. திராவிடன் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்  துரை அருள்ராஜன், திமுக மாணவரணி நிர்வாகி நெல்சன் மண்டேலா, மதிமுக மாணவரணி அமைப்பாளர் கே. ராமச்சந்திரன், காங்கிரஸ் மாணவரணி நிர்வாகி ஜே. வெங்கட், மாணவர் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு. பாலசுப்ரமணியன், எஸ். பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.