ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:19 pm

DIN

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இப்பள்ளியில்  250 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் சார்பில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த, அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.எஸ். கார்த்திக் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ ப. ஆடலரசன்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக் குழுவினர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.