திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ராணுவப் பணியில் 15 ஆண்டுகள் முடித்து, ஆர்மி ஸ்பெஷல் சர்டிபிகேட் அல்லது கடற்படையிலோ, விமானப் படையிலோ கரஸ்பாண்டிங் சான்றிதழ் பெற்ற முன்னாள் படைவீரர்கள், பட்டப்படிப்பு தகுதிக்கு நிகரான ரிசர்வ்டு காலியிட குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் என தமிழக அரசால் ஜன.23-இல் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இத்தகைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04366-220210 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (01.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (01.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (01.05.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (01.05.2026) - கும்பம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

