ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வ.சோ. ஆண்கள்

Published On :

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து, மேஜை பந்து, வளைகோல் பந்து, எறிபந்து, கேரம், தடகளம் ஆகிய அனைத்துப் போட்டிகளிலும், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மேல்நிலைப் பிரிவில் முதலிடமும், உயர்நிலைப் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். 
இதன்மூலம் மண்டல அளவில் நடைபெறவுள்ள குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளித் தாளாளர் வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், உதவி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.