தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மதுபானக் கடையை மூடக் கோரி சாலை மறியல்

திருவாரூர் அருகே மதுபானக் கடை திறப்பதை கண்டித்து பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Published On :

திருவாரூர் அருகே மதுபானக் கடை திறப்பதை கண்டித்து பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவாரூர் அருகேயுள்ள ராதாநஞ்சை கிராமத்தில் அரசு மதுபானக் கடை ஏற்கெனவே திறக்கப்பட்டு, அதற்கு அப்பகுதி மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதைத் தொடர்ந்து கடை மூடப்பட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட கடை மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை அறிந்த மக்கள் கடையை திறக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும், அப்பகுதியில் புதன்கிழமை மதுபானக் கடை திறக்கப்பட்டு மதுவிற்பனை தொடங்கியது. 
இதையறிந்த பகுதி மக்கள் கடையை மூட வலியுறுத்தி ராதாநஞ்சை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மதுபான கடை இனி திறக்கப்படாது என உறுதியளித்து எழுதி கொடுத்தனர். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.