பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழக அரசியலில் விரைவில் உயரத்தை எட்டுவோம்: வி. திவாகரன்

தமிழக அரசியலில் அண்ணா திராவிடர் கழகம் விரைவில் உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி. திவாகரன் கூறினார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:07 am IST

தமிழக அரசியலில் அண்ணா திராவிடர் கழகம் விரைவில் உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி. திவாகரன் கூறினார்.
 மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி தேரடி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் அவைத் தலைவர் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். 
கூட்டத்தில், வி. திவாகரன் பேசியது: ஜெயலலிதா எந்த  அளவுக்கு துணிச்சல் கொண்டவரோ அந்த அளவுக்கு இரக்கம் கொண்டவர். எங்கள் கட்சி பெண்கள் நலம், இளைஞர்களின் நலன்,  நாட்டின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இக்கட்சியில் 80 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களே இந்தியாவின் எதிர்காலம் என்ற வகையில் இது நமக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. 
 எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை மீறி அவரை காப்பாற்றியவர்களின் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் முதல் சுற்றுப் பயணத்தில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தேன். இதனால், நான் தாக்கப்பட்டுள்ளேன். இதில் எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. ஒரு மூத்த சகோதரிக்கு செய்கின்ற கடமையை போன்றுதான் அதை நான் செய்தேன். எதையும் எதிர்பார்க்காமல் தான் அரசியலில் ஈடுபட வேண்டும். ஓட்டுக்கு கொடுக்கும் ரூ. 200, ரூ. 500 -க்காக  நாம் நமது வாழ்க்கையை அடகு வைக்கிறோம். இந்த பணம் நமது வாழ்க்கையில் என்ன மாற்றத்தை செய்துவிடப் போகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். 
எங்களின் திட்டங்களும், செயல்பாடுகளும் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அமைச்சர்கள் வசதியாக அதை மறந்துவிடுவார்கள். பழிகளை மட்டும் எங்கள் மீது போட்டுவிட்டு, பலனை அனுபவிப்பார்கள். 
நாங்கள் இப்போது தமிழக அரசியலில் ஜீரோவிலிருந்து தொடங்கினாலும், விரைவில் உயரத்தை எட்டிப் பிடிப்போம். அதற்கானதுணிச்சலும் ஆற்றலும் எங்களிடம் உள்ளது. விரைவில் அதை நிரூபித்துக் காட்டுவோம் என்றார். முன்னதாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருப் படத்துக்கு வி. திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், கட்சி நிர்வாகிகள்  திவாகரனுக்கு ஆளுயர மாலை அணிவித்து, வெள்ளியிலான வீரவாள் மற்றும் செங்கோல் ஆகியவற்றை பரிசளித்தனர்.
 கூட்டத்தில், அண்ணா திராவிடர் கழக இளைஞர் மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் புலவர் பா. கதிரவன், மீனவரணி மாநிலச் செயலாளர் கே.ஆர். செல்வராஜ் குமார், விவசாய அணி மாநிலச் செயலாளர் எம். ஆண்டிசாமி, வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலாளர் கே. பிரதீப்ராஜ், தலைமைக் கழக செயலாளர் எஸ். சிவராஜ், மகளிரணி செயலாளர் பி. உமா, திருநங்கை அணி மாநிலச் செயலாளர் பாரதிகண்ணம்மா, மருத்துவர் அணி மாநிலச் செயலாளர்  ராஜா.வெங்கடேஷ், மாநிலச் செய்தி தொடர்பாளர் தேனி கர்ணன், மாவட்டச் செயலாளர் கை. இளந்தமிழன், மன்னார்குடி ஒன்றியச் செயலாளர்கள்ஆர்.கே. சரவணமூர்த்தி (கிழக்கு), கோ.காந்தி (மேற்கு), நகர செயலாளர் டி.என். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.