நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

கூத்தனூர் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஹயகிரிவ ஸ்ரீவித்யா பூஜை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 6:34 am IST

கூத்தனூர் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஹயகிரிவ ஸ்ரீவித்யா பூஜை நடைபெற்றது.
நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூரில் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. மாணவ - மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெற வேண்டியும் இக்கோயிலில்,1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ சரஸ்வதி அம்மனை வேண்டி ஸ்ரீஹயகிரிவ ஸ்ரீ வித்யா பூஜை நடைபெற்றது.
இப்பூஜையில் மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரும், கல்லூரி மாணவ, மாணவியரும் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இப்பூஜைக்கான ஏற்பாடுகளை சாய் பந்துகள் மற்றும் பூந்தோட்டம் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.