மன்னார்குடியில் குப்பைத் தொட்டியில் நிரம்பி காணப்படும் குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33-ஆவது வார்டு, கீழநான்காம் தெரு, தென்வடலில், 6-ஆவது தெரு சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் சேரும் குப்பைகளை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தாதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதரா சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








