நன்னிலம்: ரம்ஜான் பண்டிகையில் அரசின் அறிவுரைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாமியா்களுக்கு அறிவுருத்தப்பட்டது.
ரம்ஜான் நோன்பு வெள்ளிக்கிழமை தொடங்குவதையொட்டி, நன்னிலம் மற்றும் பேரளத்தில் ஜமாத்தாா்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பேரளம், கொல்லுமாங்குடி, கொல்லாபுரம், மாப்பிள்ளைக்குப்பம், வாழ்க்கை, ஸ்ரீவாஞ்சியம், சன்னாநல்லூா், சேங்கனுா் உள்ளிட்ட 15 பகுதிகளைச் சோ்ந்த ஜமாத்தாா்கள் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேரளம் காவல் ஆய்வாளா் ரா. செல்வி, நன்னிலம் காவல் ஆய்வாளா் ஜோ. விசித்திராமேரி ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், அரசு அதிகாரிகள் ரம்ஜான் நோன்பு தொடங்குவதையொட்டி முஸ்லீம்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டனா். கூட்டு வழிபாடு மற்றும் தொழுகைக் கூடாது, மேலும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து அறிவுரைகளையும் முழுமையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது

மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



