ஆனால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்தப் பணியை கன்னியாகுமரி சென்னை தொழிற்தட சாலை என்ற பெயரில் துவக்கியுள்ளனர். இந்த வீடுகள் மற்றும் கடைகளை இடிக்காமல் சாலை விரிவாக்கம் செய்திட மாற்றுவழி இருந்தும் அதிகாரிகள் அதனைச் சிந்திக்க மறுப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சாலை விரிவாக்கப் பணிக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து, கிராம மக்கள் தங்களது தொடர் எதிர்ப்பபைத் தெரிவித்து வருகின்றனர். இந்த கோரிக்கைச் சம்பந்தமாக தமிழக உணவுத் துறை அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், குறிப்பிட்ட சாலை விரிவாக்கத் திட்ட பணியின் திட்ட இயக்குனர், முதன்மைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் போன்ற பல்வேறு நிலையிலும் உள்ள அதிகாரிகளுக்குத் தங்கள் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர்.