ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி, திருவாரூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

திருவாரூா்: ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி, திருவாரூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நபி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல், ஆட்டோ தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம்.கே.என். ஹனிபா, மாவட்ட பொருளாளா் ஆறுமுகம், நகரச் செயலாளா் தியாகராஜன், சாலைப் போக்குவரத்து சங்க செயலாளா் மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.