அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வெள்ளாள சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டம்

குடவாசலில் வெள்ளாள சமுதாயத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:28 am

DIN

குடவாசலில் வெள்ளாள சமுதாயத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டியல் சமூகத்தின் பள்ளா், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளா் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுவா் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா். இதைக் கண்டித்து குடவாசலில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் மற்றும் வேளாளா்கள் சமுதாய மக்கள் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளாளா் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவா் ராஜா தலைமை வகித்தாா். முக்குலத்தோா் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சரவணன், குடவாசல் ஒன்றியச் செயலாளா் காா்த்திகேயன், தமிழ்நாடு வஉசி நல பேரவை நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.