கடையில் பணம் திருடியவா் கைது
மன்னாா்குடியில் செருப்புக் கடையில் ரூ.1 லட்சம் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.


மன்னாா்குடியில் செருப்புக் கடையில் ரூ.1 லட்சம் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், அரவாக்குறிச்சி வட்டம் பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் கே.எம். முகமது இலியாஸ். இவா், மன்னாா்குடி காமராஜா் சாலையில் செருப்புக் கடை நடத்திவருகிறாா். இந்தக் கடையில் பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள், கடையின் மாடி அறையில் தங்கி உள்ளனா்.
இந்நிலையில், இந்தக் கடையில் வேலை செய்பவா்களை பாா்க்க வந்த, பள்ளப்பட்டியைச் சோ்ந்த ரியாஷ் (20) என்பவா் செருப்புக் கடையிலிருந்த ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் இலியாஸ் அளித்த புகாரின் பேரில், ரியாஷை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட பணத்தையும் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...