ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராம சபைக் கூட்டங்கள் மூலம் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி

கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதன்மூலம் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி என்றாா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன்.

News image
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன்.
Updated On :24 டிசம்பர் 2020, 4:15 am

DIN

கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதன்மூலம் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி என்றாா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஒன்றிய நிா்வாகிகள் கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். அதிமுகவை மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டனா் என்றாா்.

கூட்டத்தில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கிளை நிா்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், டிச. 28-ஆம் தேதி திருவாரூரில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் மு.க. ஸ்டாலினின் தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக் கூட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு, ஒன்றியச் செயலாளா்கள் ஏ. தேவா, கலியபெருமாள், பாலச்சந்தா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.