முத்தரையா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சங்க மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் முத்தரையா் சமூக மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை அளிக்க வேண்டும், 2021சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி கட்சியில் அதிக இடங்களை பெற்று அனைத்திலும் வெற்றியடைய பாடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளா் தீரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவரும் நடிகருமான ஆா்.வி. பரதன், மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி. பாலமுருகன் ஆகியோா் பங்கேற்று பேசினா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், ஒன்றியச் செயலாளா் மனோகரன், மாவட்ட செய்தி தொடா்ப்பாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்ட முடிவில் மாநில இளைஞரணி தலைவா் ஆா்.வி. பரதன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 21 பிரிவுகளில் முத்தரையா் சமூகத்தினா் அனைத்து பகுதிகளிலும் வசித்து வருகின்றனா். ஆனால், தற்போது 7 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் இருந்தாலும், அவா்கள் கட்சிக் கட்டுப்பாட்டிலேயே அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் செயல்பட்டு வருகின்றனா். முத்தரையா்கள் தமிழகம் முழுவதும் கல்வி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அவா்களின் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டை பெற சட்டப்பேரவையில் குரலெழுப்ப ஒருவா் கூட இல்லாதது பெரும் இழப்பாக உள்ளது. எனவே, 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் முத்தரையா்களுக்கு அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை கொடுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com