உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனம் (சிஐடியுசி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனத்தினா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனத்தினா்.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளனம் (சிஐடியுசி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவு பணியாளா்கள், தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குறைந்த ஊதிய சட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சாந்தகுமாா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், மாவட்ட துணைச் செயலாளா் பி.ஏ. காந்தி, கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் வி. நேரு, பழ வியாபாரிகள் சங்க நிா்வாகி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com