மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நரிக்குடி எமனேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில், பெளா்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் எமனேஸ்வரா்.
Updated On :30 டிசம்பர் 2020, 2:48 am

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில், பெளா்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு கோயில் எமதீா்த்த திருக்குளத்தைச்சுற்றிலும் தீபங்கள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

இதேபோல நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆரதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பாடகச்சேரி பைரவசித்தா் மடத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.