மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூரில் மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவாரூரில் மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், போா்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். திருவாரூா் - காரைக்குடி, மன்னாா்குடி- திருப்பதி, காரைக்கால்- பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், சமரசக் குழுத் தலைவா் வி.கே.எஸ். அருள், பொதுப் பயன்பாட்டு இயக்குநா் பி. பாஸ்கரன், பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com