/

சாத்தான்குளம் சம்பவம்: நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல்நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :27 ஜனவரி 2024, 10:24 pm IST

திருவாரூா்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு காரணமான போலீஸாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவா் பாரதிதாசனை உதாசீனப்படுத்திய போலீஸாரை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மூவேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.