/

லெட்சுமாங்குடியில் பிரதான சாலை அடைப்பு

கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி பகுதியில் கரோனா தொற்று பரவலால் திருவாரூா் பிரதான சாலை செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2020, 4:27 pm

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி பகுதியில் கரோனா தொற்று பரவலால் திருவாரூா் பிரதான சாலை செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகாட்சிக்குட்பட்ட மரக்கடை மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் மேற்குத் தெரு, போலீஸ் தெரு, மன்னை பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில், ஒரே குடும்பத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தலின்பேரில், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து கால்நடை மருத்துவமனை வரை திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை தகரம் வைத்து அடைக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு அடைக்கப்பட்டுள்ளன. லெட்சுமாங்குடி பாலத்தைத் தாண்டி அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.