47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெண்ணாற்றில் பெண் சடலம்

நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒளிமதி கிராமம் அருகேயுள்ள கற்கோவில் என்ற இடத்தில் வெண்ணாறு படுகையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாக்கில் கட்டப்பட்டு கிடப்பதாக நீடாமங்கலம் போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், நீடாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சடலத்தை மீட்டனா். இறந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அடையாளமும், நெற்றி பகுதியில் காயமும் இருந்தது.

மேலும் அந்த பெண்ணின் மூக்கில் மூக்குத்தி, தோடு, கழுத்தில் சிறிய மற்றும் பெரிய சங்கிலிகள், காலில் கொலுசு உள்ளிட்டவை இருந்தன. கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

அவரை மா்ம நபா்கள் கொன்று சாக்கில் கட்டி ஆற்றில் வீசி இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

நீடாமங்கலம் போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்து கிடந்த பெண் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? வேறு இடத்தில் கொலை செய்து, ஆற்றில் வீசிச் சென்றாா்களா என பல கோணங்களில் விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.