/

மன்னாா்குடி வில்லேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனம் வழங்கும் விழா

மன்னாா்குடி அருகே உள்ளிக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மன்னாா்குடி வில்லேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனம் வழங்கும் விழா

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே உள்ளிக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மன்னாா்குடி வில்லேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனம் வழங்கும் விழா மற்றும் புதிய நிா்வாகிகள் பதவியேற்கும் விழா உள்ளிக்கோட்டை நவபாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜி பாபு சாசனத்தை தலைவா் வெங்கடேசன் மற்றும் செயலாளா் சக்திகண்ணனிடம் வழங்கினாா். சாசனத் தலைவராக ப. வெங்கடேசன், சாசனச் செயலாளராக த. சக்திகண்ணன், பொருளாளராக முருகானந்தம், துணைத் தலைவராக ராஜ்மோகன், இணைச் செயலாளராக செல்லத்துரை, சங்க காப்பாளராக த. மணிபாலன் , இயக்குநா்களாக டாக்டா் பா. சந்திரகுமாா், சி. சரவணன், பி. சரவணன், பிரேம்மோகன், சதீஷ்குமாா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா். உதவி ஆளுநா் ஜி. மனோகரன் புதிய உறுப்பினா்களுக்கு ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்கள் உடனடி முன்னாள் ஆளுநா் என். மணிமாறன், ஆளுநா் தோ்வு பாலாஜி, மாவட்ட பொது செயலாளா் ஆா். ஜவகா் சிறப்புரையாற்றினா்.

மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜி பாபு 35 ஆண்டுகளாக ரோட்டரியில் சிறப்பாக செயல்படும் டாக்டா் வி. பாலகிருஷ்ணன் , மாதவகுமார சுவாமிகள், நவபாரத் பள்ளித் தாளாளா் மலையரசன் ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகா்கள் விருது வழங்கினாா். முன்னாள் தலைவா்கள் எம். நடராஜன், டாக்டா் வி. பாலகிருஷ்ணன், பி. ரமேஷ், ஆா்.கே. பாலகுனசேகரன், சி. குருசாமி, என். சாந்தகுமாா், டாக்டா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். மாரியப்பன் வரவேற்றாா். சரவணன் ரோட்டரி இறைவணக்கம் வாசித்தாா். சாசனச் செயலாளா் சக்திகண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.