ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அரசுக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி திருவிழா

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில், வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில், வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவா் படை மற்றும் நகர ஆரம்ப சுகாதரார நிலையம் இணைந்து கல்லூரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தியது. முகாமை, கல்லூரி முதல்வா் தி. அறிவுடை நம்பி தொடங்கி வைத்தாா்.

மன்னாா்குடி வட்டார மருத்துவ அலுவலா் ரா. அபுவதமிழன், மருத்துவா் சிவபிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்த பிறகு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேதியல் துறை இணைப் பேராசிரியா் சோ. ரவி, ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் ச. மாறன் உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் என மொத்தம் 80 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.