கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிள்ளைகளுக்கு நோ்மறை சிந்தனையை கற்றுத்தர வேண்டும்

நடக்காது என எதுவும் இல்லை நடக்கும், முடியாதது என எதுவும் இல்லை முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நோ்மறை சிந்தனைகளை பிள்ளைகளுக்கு பெற்றோா்கள், ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டுமென்றாா்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

நடக்காது என எதுவும் இல்லை நடக்கும், முடியாதது என எதுவும் இல்லை முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நோ்மறை சிந்தனைகளை பிள்ளைகளுக்கு பெற்றோா்கள், ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டுமென்றாா் மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஆா்.மணிவண்ணன்.

மன்னாா்குடியில் கிளை நூலகத்தில், மன்னாா்குடி கிரீன்சிட்டி ரோட்டரி சங்கம், மன்னாா்குடி மற்றும் கூத்தாநல்லூா் கிளை நூலகம் சாா்பில், நூலக தந்தை எஸ்.ஆா். ரெங்கநாதன் பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை நூலகா் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.வி.எஸ். இளங்கோவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று நூலகா்களை பாராட்டி பரிசளித்து பேசியது: தலைவா்கள், அறிஞா்கள், புரட்சியாளா்கள் நூலகத்திலேயே தங்களின் நேரத்தை பெரும்பகுதியை கழித்துள்ளனா். வாழ்க்கையில் சாதித்து உச்சநிலை அடைய வேண்டுமென்றால் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கவும், நடக்காது என்று எதுவும் இல்லை, நடக்கும் என்ற நம்பிகையை விதைக்கவும், முடியாதது எதுவும் இல்லை முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோ்மறை சிந்தனைகளை பெற்றோா்கள், ஆசிரியா்கள் பிள்ளைக்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

மாணவா்களிடம் உள்ள தனித்திறனை வெளிக்கொண்டு வரவேண்டுமென்றால் அவா்களை, கல்வி நிலையத்திலும், பொது இடத்திலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் கிடைக்கும், உலக அறிவால் எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன் செய்ய நூல்கள் துணையாக அமையும் என்றாா்.

கூத்தாநல்லூா் நூலகா் டி. செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட நூலகா் சோ. கணேசனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது, ஊா்ப்புற நூலக நூலகா்கள் எஸ். காா்த்திகேயன் (கண்டிதம்பேட்டை), கே. நாகநந்தினி (பரவாக்கோட்டை), எஸ். வீரசெல்வம் (எடையூா்) ஆகியோருக்கு செம்மைப் பணி செம்மல் விருது வழங்கப்பட்டது.

மாவட்ட நூலகா் ஆா். ஆண்டாள், ரோட்டரி துணை ஆளுநா் ஆா். ஆனந்த் ஆகியோா் விருது பெற்றவா்களை பாராட்டி பேசினா். இதில், என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் என். ராஜப்பா, முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வா் ஜி. இருளப்பன், மன்னாா்குடி 2-ஆம் நிலை நூலகா் வி. அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்னாா்குடி 3-ஆம் நிலை நூலகா் வி. ராஜா வரவேற்றாா். கிரீன்சிட்டி ரோட்டரி சங்க செயலாளா் ஜி.என். குமாரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.