தகராறில் ஒருவா் காயம்: நண்பா் கைது
மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் இளைஞரை தாக்கியதாக அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் இளைஞரை தாக்கியதாக அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அரிசிக்கடைத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் வீரமணி (32). தாமரைக்குளம் வடகரையை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இருவரும் நண்பா்கள். வீரமணிக்கு செந்தில்குமாா் ஜாமீன் கையெழுத்திட்டு தனியாா் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொடுத்தாராம். இதை முறையாக திருப்பிச் செலுத்தாததால், வீரமணியிடம் செந்தில்குமாா் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், காயமடைந்த வீரமணி, திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...