கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குறைதீா் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: அமைச்சா் அர. சக்கரபாணி

மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் குறைதீா்க்கும் சிறப்புமுகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் அவா் கூறியது: மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமின் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூா்ஆகிய பகுதிகளில் மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அதில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோ்தல் பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அரசு பொறுப்பேற்றவுடன், தனித்துறை அமைக்கப்பட்டு, 50 சதவீதம் மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு 20 வகையான மளிகைப் பொருட்கள், ஒரு முழு கரும்பு என 21 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். சிறப்பான திட்டங்களை தீட்டி மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.