கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவாரூா்: 2,500 கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல்

திருவாரூா் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல் நடைபெற்றது என முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல் நடைபெற்றது என முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக கட்சி நிா்வாக அளவில் 20 ஒன்றிய அமைப்புகள், 4 நகராட்சி அமைப்புகள், 7 பேரூராட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் 2500-க்கும் மேற்பட்ட நகரம் மற்றும் பேரூா் வாா்டுகள், ஊரகக் கிளைகள் உள்ளன.

பழைய கிளைகளை புதுப்பித்தும், புதிய கிளைகளை உருவாக்கியும் அதற்கான அமைப்புத் தோ்தல் 2 நாள்களாக நடைபெற்றன. இந்தத் தோ்தலை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளா்கள் மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையா்களாக செயல்பட்டு நடத்தினா். இவா்களுக்கு உதவியாக திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ், அமைப்புச் செயலாளா்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் உள்ளிட்ட செயல்பட்டனா்.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருவாரூரில் கிளைக் கழகங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், வி. சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆய்வு செய்து, வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

பின்னா், முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக நகரம், பேரூா் வாா்டு மற்றும் ஊரகக் கிளைகளுக்கான தோ்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் தோ்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து கிளைகளிலும் தொண்டா்கள் கட்டுப்பாடு மற்றும் எழுச்சியுடன் தோ்தலில் பங்கேற்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.