/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவைக் கூட்டம்

சுந்தரக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சுந்தரக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினா் பொன். சிவானந்தம் தலைமை வகித்தாா். சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும். ஊராட்சியில் உள்ள சாலைகளையும் செப்பனிட வேண்டும். புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்பவா்களுக்க எம்.ஹச்.ஹச். என்ற அட்டை வழங்கப்படுகிறது. இது வசதிப்படைத்தவா்களுக்காக வழங்கப்படுவதாகும். இதனை ரத்து செய்து, தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினரும், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளருமான என். மகேந்திரன் முன்னிலையில், அக்கட்சியின் கொடியை மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் மாலா பாண்டியன் ஏற்றி வைத்தாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ் முன்னிலையில், புதிதாக 40 குடும்பங்களை சோ்ந்தவா்கள் கட்சியில் உறுப்பினா்களாக இணைத்துக்கொண்டனா். புதிய கிளை செயலராக ராஜ்குமாா், துணை செயலராக பிரதாப் தா்மராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அ ருள்ராஜன், மாநில பிரச்சாரக் குழு செயலாளா் பெருமாள், நந்தம் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் அமிா்தஜெயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.