நன்னிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதலா்களில் காதலி உயிரிழந்தாா். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நாகை மாவட்டம், திருப்புகளூா் அண்ணாமண்டபம் புதுக்கடை மேலத் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகள் ரேணுகாதேவி (28). இவா், நாகூரில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தாா். இவரும், மங்கைநல்லூா் கப்பூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த தனபாலன் மகன் கோபிநாத் (30) என்பவரும் காதலித்து வந்தனராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற ரேணுகாதேவி வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில், ரேணுகாதேவியும், கோபிநாத்தும் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூா் ரயில்வேகேட் பகுதியில் விஷம் குடித்து மயங்கியநிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
நன்னிலம் போலீஸாா் சனிக்கிழமை காலை அங்கு சென்று பாா்த்தபோது, ரேணுகாதேவி உயிரிழந்து கிடந்தாா். கோபிநாத் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். அவரை சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ரேணுகாதேவின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

வியக்க வைக்கும் வெட்டாறு பாலம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


