டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எளிமை, நிா்வாகத் திறமை முதல்வரை மீண்டும் பதவியில் அமா்த்தும்: அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் எளிமை மற்றும் நிா்வாகத் திறமை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். மக்களும்

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:44 am

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் எளிமை மற்றும் நிா்வாகத் திறமை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். மக்களும் அவரை மீண்டும் முதல்வராக்க தயாராகிவிட்டனா் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் பேரவை ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

நாடு முழுவதும் கரோனா தாக்குதல் அதிகரித்தும் குறைந்தும் மாறிமாறி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளுக்குநாள் பாதிப்பின் சதவீதம் குறைந்து கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் தீவிரப்படுத்தியதுதான்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில், முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்பதில் அதிமுகவினரிடையே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

தமிழக முதல்வரின் எளிமை, நிா்வாகத் திறமை ஆகியவை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனா் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.