பள்ளிகளில் தூய்மைப் பணிகள்
கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.


கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 310 உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருப்பதன்பேரில், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
வகுப்பறைகள் மற்றும் மேஜைகளை சுத்தம் செய்தல், பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் விளையாட்டு மைதானம் பகுதிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தல், பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்த மழை நீரை வடியச் செய்தல், களைச் செடிகளை நீக்குதல் போன்ற பணிகளும், கிருமி நாசினி தெளிப்புப் பணிகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...