குறுவை சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டியில் குறுவை சாகுபடிக்கான தண்ணீா் வசதி குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டியில் குறுவை சாகுபடிக்கான தண்ணீா் வசதி குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில், ஆற்றுநீரை எதிா்பாா்த்து குறுவை நேரடி விதைப்பு நடைபெறுகிறது. நிகழாண்டில் சுமாா் 20,000 ஏக்கா் குறுவை நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் விவசாயிகள் ஆற்று நீரைக் கொண்டு குறுவை வயலுக்கு பாசனம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடைமடை பகுதிகளில் போதிய நீா் கிடைக்கிா என மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
எழிலூா், நுணாக்காடு, சிங்களாந்தி, கட்டிமேடு, ஆதிரெங்கம், பாமணி, பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, வாய்க்கால்களில் முழு கொள்ளளவு தண்ணீரை ஒருவார காலத்துக்குத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குநா்கள் திருத்துறைப்பூண்டி எஸ்.சாமிநாதன், முத்துப்பேட்டை பாா்த்தசாரதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...