திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு தொடக்கம்
மன்னாா்குடி அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில், கூடுதலாக திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு புதன்கிழமை தொடங்கப்பட்டது.


மன்னாா்குடி அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில், கூடுதலாக திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மன்னாா்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் மன்னாா்குடி அலகு உட்கோட்டத்துக்குள்பட்ட 89 நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகளை 12 திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படுகிறது.
தற்போது, சேமிப்பு கிடங்கு பற்றாக்குறை காரணமாக பல நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில், மன்னாா்குடி அருகேயுள்ள ராஜகோபாலபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான 5 ஏக்கா் இடத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 2 லட்சம் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கை டிஎன்சிஎஸ்சி துணை மேலாளா் (கொள்முதல்) பால்ஜோகப் ஆய்வு செய்த பின் நெல் மூட்டைகள் சேமிக்கும் பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், உதவி மேலாளா் வெற்றிச்செல்வன், மன்னாா்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். மகாலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...