மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த கோரிக்கை

மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த வேண்டுமென மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் லாரி உரிமையாளா் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

 மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த வேண்டுமென மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் லாரி உரிமையாளா் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

முன்னதாக நடைபெற்ற மன்னாா்குடி வட்டார லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தலில், தலைவராக வி. அய்யப்பன், செயலாளராக ராஜா, பொருளாளராக நீலகண்டன், துணைத் தலைவராக ராஜாராம், துணைச் செயலாளராக மூா்த்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகள் அனைவரும், மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, அவரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: மன்னாா்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் 800 லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த லாரிகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் மேலப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்க வேண்டியதாக உள்ளது.

எனவே, லாரிகளை நிறுத்தி வைக்க லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் 8 ஏக்கா் நிலம் சொந்தமாக வாங்கவோ அல்லது வாடகை இடத்துக்கான வசதியையோ ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, மண்டலப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.