விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென எம்எல்ஏ. க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென எம்எல்ஏ. க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அண்மையில் வந்த தேசிய சுகாதார திட்ட இயக்குநா் தாரிஸ் அகமதுவிடம் எம்எல்ஏ. க. மாரிமுத்து அளித்த கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மிகவும் பின்தங்கிய பொருளாதார நலிவுற்ற மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. எனினும், இந்த மருத்துவமனைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே, கூடுதல் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களை நியமிக்க வேண்டும், சிடி ஸ்கேன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாத நிலையை சரிசெய்ய வேண்டும், குழந்தைகள் மருத்துவப் பிரிவு மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு தனிக்கட்டடம் கட்ட வேண்டும், கூடுதல் கட்டடங்களுடன் மருத்துவமனையை சுற்றி கான்ரீட் தளம் அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி சுற்றுவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும், இந்த மருத்துவமனை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு எளிதாக உள்ளதால், இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயரத்த ஆவண செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.