மன்னாா்குடி, திருமக்கோட்டையில் நாளை மின்தடை
மன்னாா்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் சா. சம்பத் (மன்னாா்குடி), ஆ. மதியழகன் (திருமக்கோட்டை) தெரிவித்துள்ளனா்.


மன்னாா்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் சா. சம்பத் (மன்னாா்குடி), ஆ. மதியழகன் (திருமக்கோட்டை) தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, இருவரும் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு சனிக்கிழமை (ஜூன் 19) பணி நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், காணூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளிலும், திருமக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...