நாடு தழுவிய போராட்டம் குறித்து ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து, வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து, வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். கரோனா நிவாரணமாக ரூ. 7,500 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஜூன் 30-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிா்வாகி ராதா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...