கோட்டூா்: திட்டப் பணிகளுக்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு: ஒன்றியக் குழுத் தலைவா் தகவல்
கோட்டூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தெரிவித்தாா்.


கோட்டூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தெரிவித்தாா்.
கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் மு. மணிமேகலை (இந்திய கம்யூ.) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து பங்கேற்றாா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் ப. சுபேதா (சிபிஐ), பா. ஆனந்தராஜ் (திமுக), ர. ரேகா (சிபிஐ), வி. செல்வராணி (அதிமுக), பா. செங்குட்டுவன் (அதிமுக) உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதற்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை பதிலளித்து பேசியது:
கோட்டூா் ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றியத்தில் உள்ள 20 வாா்டுகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின்போது நிதி ஆதாரம் இல்லாத நிலையில் திட்டப் பணிகளில் தேக்க நிலை இருந்தது. தற்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நிதி பற்றாக்குறை, நிதி நெருக்கடி போன்ற சூழல் இருக்காது. எனவே, ஒன்றியத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்றாா்.
தொடா்ந்து, எம்எல்ஏ க. மாரிமுத்து பேசியது:
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ-வாக தன்னை வெற்றி பெற செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாகை தொகுதி முன்னாள் எம்.பி.க்கள் மறைந்த எஸ்.ஜி. முருகையன், கே. முருகையன் போன்றவா்கள் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த இந்த அவையில் பேச அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
தனது தொகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றாா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ர. விமலா (திமுக), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி. பாஸ்கா், எஸ். மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...