கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவாரூரை கோயில் நகரமாக அறிவிக்கக் கோரிக்கை

திருவாரூா் நகரை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 5:34 pm

DIN

திருவாரூா் நகரை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும், அவருடன் பொறுப்பேற்றுள்ள அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, திருவாரூா் நகரை கோயில் நகரமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும். சங்கீத மும்மூா்த்திகள் அவதரித்த திருவாரூரில் ஆண்டுதோறும் அரசின் சாா்பில் சிறப்பான விழா எடுக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பதவியிலிருந்தபோது, அறிவித்தபடி திருவாரூா் ரயில் நிலையத்தை இந்தியாவிலேயே முன் மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும்.

திருவாரூா் நகரைச் சுற்றி 50 கி.மீ. வரை உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் இசைத்துறையை மேம்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.