விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

திருத்துறைப்பூண்டியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்தின்போது, எமதா்மன் வேடம் அணிந்து பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், சாலைகளில் எச்சில் துப்பக் கூடாது, எச்சில்கள் காற்றில் கலப்பதன் மூலம் கரோனா அடுத்தவருக்கு வேகமாக பரவும், சுகாதார துறை அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, தேவையான காய்கனிகள், மளிகை பொருள்களை தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை, லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில், நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி. பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் இளங்கிளி வளவன், சாா்பு ஆய்வாளா்கள் சிவகுகன், தேவதாஸ், லாரி உரிமையாளா் சங்க தலைவா் வி. ஆறுமுகம், செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.